தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தினை செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டித்து நடத்துவது என மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது. கட்சியின் தேனி மாவட்டக்குழு ஏற்கெனவே இருந்த தீக்கதிர் விற்பனையை ஒரு மடங்கு உயர்த்தி, இலக்கினை நிறைவு செய்துள்ளது. புதனன்று நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் சந்தா சேர்ப்புக்கான தொகை ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் தேனி மாவட்டம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டக்குழுக்களும் கால நீட்டிப்பை பயன்படுத்தி இலக்கை நிறைவு செய்து, மாநிலக் குழு தீர்மானித்துள்ள ஒட்டுமொத்த இலக்கை அடையும் வகையில் சந்தா சேர்ப்பு இயக்கத்தை தொடர்ந்து நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

Leave A Reply

%d bloggers like this: