தாராபுரம்,
தாராபுரம் அருகே டிபிஎம் நினைவு படிப்பக திறப்பு விழா நடைபெற்றது.

தாராபுரம் அடுத்துள்ள டி.காளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் டி.பி.முத்துச்சாமி நினைவு படிப்பகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மில் கிளை செயலாளர் என்.காளியப்பன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி படிப்பகத்தை திறந்து வைத்தார். தோழர் டி.பி.முத்துசாமி நினைவு படிப்பகத்தை மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் திறந்து வைத்தார். கட்சி கொடியை ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.துரைராஜ் ஏற்றிவைத்தார்.  கார்ல்மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.மாரிமுத்து, திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் திறந்து வைத்தனர். படிப்பக திறப்பு விழாவில் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், தாலுகா குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னுச்சாமி, கே.மேகவர்ணன், கே.மனோகரன், டி.கிருஷ்ணமூர்த்தி, கே.செல்லத்துரை, ஆர்.தாமரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.