கோவை,
தலித் இளைஞர் மணிகண்டன் மரணம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி 9 ஆவது நாளாக அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்த கலிக்கநாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அதேபகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கு சொந்தமான ரேவதி பந்தல் நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆக.29 ஆம் தேதி வேலைக்கு சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர் பணியாற்றி வந்த நிறுவன உரிமையாளரிடம் கேட்டபோது அவர் கீழே விழுந்து காயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.  இதையடுத்து மணிகண்டனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். எனவே, அவரது மரணத்தில் சந்தேகமடைந்த உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் மனு அளித்தனர். ஆனால், இதுதொடர்பாக உரிய பிரிவில் வழக்கு பதிவு செய்யாததால் ஆவேசமடைந்த அவரது உறவினர்கள் மணிகண்டனின் உடலை வாங்க மறுத்து கடந்த 9 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வழக்கை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வலியுறுத்திவியாழனன்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதிதமிழர் பேரவையின் தலைவர் அதியமான் தலைமை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்ன
ணியின் மாவட்ட தலைவர் இரா.ஆறுச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன், திராவிடர் தமிழர் கட்சியின் துணை பொதுச்செயலாளர் அகிலன், தமிழர் விடியல் கட்சியின் பொது செயலாளர் மா.டைசன் ஆகியோர் கண்டனஉரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் தலித் அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: