சேலம்,
சேலத்தில் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றஅதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

வடகிழக்கு பருவமழையையொட்டி சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்வரத்துள்ள கால்வாய்கள், நீர் நிலைகள் ஆகியவற்றில் தூர்வாறுதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் மழைநீர்தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 25ல் சின்னேரி வயல்காடு, ஓடைப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, மாநகராட்சி ஆணையர் சதீஸ் ஆகிய இருவரும் வியாழனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஓடைப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து சிவதாபுரம், சேலத்தாம்பட்டி ஏரி, ராமலிங்க நகர், கோனேரிபட்டி உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: