சேலம்,
வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடக்கோரி மேட்டூரில் வருவாய்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும். அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டகிளை துணை தலைவர் செந்தில் தலைமை வகித்தார். இதில் அரசு ஊழியர்சங்க மேட்டூர் கிளை செயலாளர் சிங்கராயன், வருவாய்துறை சங்க செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் விளக்க உரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் சிறப்புரையாற்றினார். முடிவில், பொருளாளர் ஆண்டாள் நன்றி கூறினார். இதில் வருவாய்த்துறை ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.