ஏற்காடு,
ஏற்காடு மலைக்கிராமத்தில் 10ம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனார்.

சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா மாரமங்கலம் பஞ்சாயத்திற்குட்பட்ட கேளையூர் கிராமத்தில் போலி மருத்துவர் ஒருவர் கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வருவதாக புகார் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் ஏற்காடு அரசு மருத்துவமனை மருத்துவர் குமாரசெல்வம் தலைமையில் மருத்தவர் தாம்சன், வட்டார சுகாதார அலுவலர் செல்வகுமார் ஆகியோர் புகாரில் கூறப்பட்ட கிளினிக்கிற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் தர்மபுரி மாவட்டம், பொம்மிடி, ரேகஹல்லியை சேர்ந்த ராஜேந்திரன் (40) என்பவர் 10 ஆம் மட்டுமே படித்துவிட்டு, கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலி மருத்துவர் ராஜேந்திரனையும், கிளினிக்கில் அவர் வைத்திருந்த மருந்துகளையும் கைப்பற்றிய அதிகாரிகள் ஏற்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராஜேந்திரன் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பொம்மிடியில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் பூ வியாபாரம் செய்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக கேளையூர் கிராமத்தில் மருத்துவர்எனக்கூறி சிகிச்சை அளித்து வந்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து காவல் துறையினர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: