திருப்பூர்,
திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வியாழனன்று நடைபெற்றது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப் பணித்திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்திலுள்ள குமரன் அரங்கில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இவ்விழாவில் அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் இராமையா தலைமையுரையாற்றினார். மேலும், சிறப்பு விருந்தினராக அரசு தலைமை மருத்துவமனையின் நம்பிக்கை மைய ஆலோசகர் கருப்புசாமி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் அவர் கூறுகையில், எய்ட்ஸ் பரிசோதனை செய்பவர்களுக்கு எய்ட்ஸ்  இருப்பதை கண்டறிந்தால்அவர்களின் பெயர் மற்றும் விலாசங்களை ரகசியமாக வைக்கப்படும்.

மேலும், கொசு கடிப்பதால் எய்ட்ஸ் பரவாது. இவர்கள் பயன்படுத்திய சமையல் பாத்திரங்கள் மற்றும்கழிப்பறைகள் மூலமாகவும் பரவ வாய்ப்பில்லை. எனவே, எய்ட்ஸ் பாதித்தவர்களை ஒதுக்கி வைக்காமல் சமுதாயத்தில் அரவணைத்தும், ஆறுதலாகவும் இருக்க வேண்டும். இவ்வகை நோய்கள் நான்கு வழிகளில் பரவுகிறது. பலருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வதால், பரிசோதிக்கப்படாத இரத்தத்தை பயன்படுத்துதல், கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துதல், எச்ஐவி பாதித்த தாயிடமிருந்து குழந்தைகளுக்கு பரவ வாய்ப்புள்ளது என தெரிவித்தார். நிறைவாக, எய்ட்ஸ் விழிப்புணர்வு அடங்கிய கையேடு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நோய் பற்றிய சந்தேகங்கள் இருப்பின் 1800 419 1800 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளாலாம் என்றும் கூறினார். இந்த கருத்தரங்களில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.