சங்வான்:
52-வது உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் தென்கொரியாவில் உள்ள சங்வான் நகரில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் துவங்கியது.

10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் (ஜூனியர்) பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் பெற்று உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.தென்கொரியா வீரர் லிம் ஹோன்ஜினுக்கு (243.1) வெள்ளிப்பதக்கமும்,மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் சிங் சீமா(218.0) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த சவுரப் சவுத்ரி (16 வயது)சமீபத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் ஆடவருக்கான 10 மீ. ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.