தீக்கதிர்

3-வது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தம்..!

இராமேசுவரம்:
இலங்கை  அரசால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளை மீட்க வேண்டும். சேதமடைந்துள்ள படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இராமேசுவரம் மீனவர்கள் மூன்றாவது நாளாக புதனன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அனைத்து கட்சியினருடன் இணைந்து செப்டம்பர் 7ஆம் தேதி இராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.