தீக்கதிர்

20 ஆண்டு தலைமறைவாக பாஜக எம்எல்ஏ-வுக்கு 40 நிமிடத்தில் ஜாமீன்..!

சத்னா:
20 ஆண்டு தலைமறைவு குற்றவாளி என்ற கூறப்படும் பாஜக எம்எல்ஏ-வுக்கு நீதிமன்றம் 40 நிமிடத்தில் ஜாமீன் வழங்கியுள்ளது.

மத்தியப்பிரதேசம் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றாகும். இங்கு சங்கர்லால் திவாரி என்பவர் பாஜக எம்எல்ஏ-வாக இருக்கிறார். இவர் காவல்துறை அதிகாரியைத் தாக்கியதாக கடந்த 1997-ஆம் ஆண்டு வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இதுதொடர்பாக கேள்வி எழும்போதெல்லாம் அவர் தலைமறைவாக இருக்கிறார் என்றே காவல்துறையினர் கூறி வந்துள்ளனர்.                                          பிரதமர் மோடியுடன் சங்கர்லால் (கோப்புப்படம்)                                  தற்போது தேர்தல் நெருக்கவுள்ள நிலையில், காவல்துறை என்ன நினைத்ததோ, திடீரென சங்கர்லால் திவாரியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது. நீதிமன்றமும் அவசர அவசரமாக விசாரணை நடத்தி, 20 வருட தலைமறைவுக் குற்றவாளிக்கு, சுமார் 40 நிமிடங்களுக்குள் ஜாமீன் வழங்கி விடுவித்துள்ளது.

இது எதிர்க்கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது ஒருபுறமிருக்க, பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமியே- திவாரிக்கு ஜாமீன் அளிக்கப்பட்ட விதத்தைக் கிண்டலடித்து ட்வீட் செய்துள்ளார்.