குட்கா ஊழலில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் , குற்றசாட்டிற்குள்ளான டி.ஜி.பி உட்பட்ட காவல் துறையினர் பதவி விலக வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மத்திய சிறையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கிற்கு சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
வரலாற்றில் முதல் முறையாக டி.ஜி.பி வீட்டில் சோதனை நடந்து வருகின்றது எனவும் மேலும் பல காவல் துறையினர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்த அவர்
ஓய்வு பெற்ற , குற்றசாட்டிற்குள்ளான ஒருவரை மீண்டும் மீண்டும் டி.ஜி.பியாக பொறுப்பு ஏன் கொடுக்கப்படுகின்றது என கேள்வி எழுப்பினார்.

மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எத்தனை முறை சோதனை நடத்தப்படும் என தெரியவில்லை, எவ்வளவு ஆதாரங்கள் வெளயளியாகும் என தெரியவில்லை என கூறிய அவர், இவ்வளவு நடந்தும் தமிழக முதல்வர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பது கண்டனத்திற்குரியது எனவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொடர்ந்து ஊழல் குற்றசாட்டுகளில் சிக்கி வரும் அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும், டி.ஜி.பி பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழக முதல்வர்,துணை முதல்வர் மீதும் ஊழல் வழக்குகள் நடப்பதால மொத்தமாக இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சோதனை நடத்தி என்ன செய்ய போகின்றனர் என தெரியவில்லை , ஏற்கனவே பல முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் பதுக்க வேண்டிய ஆதாரங்கள் பதுக்கப்பட்டு இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் என்ன ஆனது என தெரியவில்லை என தெரிவித்த அவர், மக்கள் போராட்டங்கள் மூலமே இந்த ஆட்சியை போக்க முடியும், அவர்களாகவே போக மாட்டார்கள் என தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருந்தால் போதும், பதவியில் தொடரலாம் என்ற நம்பிக்கையில் ஆளும் கட்சியினர் நினைக்கின்றனர் என தெரிவித்த அவர், 18 எம்.எல்.ஏ தீர்ப்பு வந்தால் அது நிச்சயம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கின்றது என தெரிவித்த அவர்,
இந்த நடவடிக்கைக்கும் அந்த தீர்ப்பிற்கும் தொடர்பு இருக்கின்றதா என தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அதிமுக அரசு ஏற்கனவே மோடி அரசுடன் ஒத்துப்போகும் நிலையில் தற்போது மீண்டும் கூடுதலாக அதிமுகவை நிர்பந்தபடுத்தவும் இந்த சோதனை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறது என தெரிவித்த அவர்,அரசியல் தேவையை பூர்த்தி செய்ய இந்த சோதனையை பா.ஜ.க அரசு இந்த சோதனையை நடத்தினால் பிரதமர் மோடிதான் குற்றவாளிவாக இருக்க முடியும் எனவும் தெரிவித்தார்.ஹைட்ரோ கார்பன் உட்பட கனிமவளங்களை எடுக்க விதிகளை தளர்த்தி இருக்கின்றது என குற்றம் சாட்டிய அவர், இயற்கை வளங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையினை மத்திய அரசு மேற்கொள்கின்றது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரானார் இழுத்த செக்கினை பொது மக்கள் பார்வைக்கு பூங்காவில் வைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.