மாட்ரிட்:
ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் கால்பந்து கிளப் போட்டிகளில் ரியல் மாட்ரிட் – பார்சிலோனா அணிகள் மோதும் ஆட்டம் என்றால் மைதானமே நடனம் ஆடும்.
இதற்கு காரணம் நட்சத்திர வீரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் (ரியல் மாட்ரிட்),மெஸ்ஸியும் (பார்சிலோனா) இரு துருவங்களகாக மோதிக்கொள்வது தான்.சாம்பியன்ஸ் கோப்பை முடிந்த கையோடு கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலி கிளப் அணியான யுவான்டஸ் அணிக்கு மாறியுள்ளார்.இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் அணி வீக்கானது என பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மெஸ்ஸி மேலும் கூறியதாவது ‘‘சிறந்த வீரர்களை கொண்ட ரியல் மாட்ரிட் அணி உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.ஆனால், கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாத ரியல் மாட்ரிட் சற்று தரம் குறைந்த இருப்பதை நான் உணர்கிறேன்.யுவான்டஸ் அணி அனைத்து பலத்தையும் பெற்று சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது’’ எனக் கூறியுயள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.