புதுதில்லி:
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்திற்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. எனவே இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: