புதுச்சேரி;
“அனில் அம்பானி-தான் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் புரோக்கர்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார்.                                                                             ஜெயபால் ரெட்டி                                                            இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:                                                                                                                      “பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது; மோடியின் அமைச்சரவைக்குக்கூட ரபேல் ஒப்பந்தம் குறித்து எதுவும் தெரியவில்லை. அதைப்பற்றிக் கேட்டால், ‘உயர்மட்ட அளவில் முடிக்கப்பட்ட அந்த ஒப்பந்தம் பற்றி பிரதமர் மோடிக்கு மட்டுமே தெரியும்’ என்று கூறி தவறுகளை மறைக்கப் பார்க்கின்றனர்.ரபேல் விமானத்தின் தரம் குறித்த எந்தக் கேள்வியும் இங்கு எழவில்லை. அதே நேரத்தில், திடீரென நடந்த ஏஜென்சி மாற்றம் மற்றும் விலை அதிகரிப்பின் பின்னணி என்ன? என்பதுதான் கேள்வி.ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதியன்று ஒப்பந்தம் போடப்பட்ட பின்பு 12 நாள்கள் கழித்து ரிலையன்ஸ் கம்பெனி பெயரில் புதிய ஏஜென்சி தொடங்கப்பட்டு, அதன்மூலம் ரபேல் விமானங்கள் வாங்கப்பட்டது எதற்காக?

ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடிதான் போர் விமானங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன என்றும் விமானங்களை மேம்படுத்தத் தேவைப்படும் கூடுதல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களால்தான் விலை உயர்ந்துவிட்டதாகவும் மோடி அரசு பொய்யான தகவல்களைக் கூறி வருகிறது.ஆனால், ரபேல் விமானங்கள் வாங்கப்பட்ட விவகாரத்தில் முழுக்க முழுக்க அனில் அம்பானி புரோக்கராகச் செயல்பட்டு இருக்கிறார்.இவ்வாறு ஜெய்பால் ரெட்டி கூறியுள்ளார்.காங்கிரஸ் ஆட்சியில்தான் ரபேல் ரக போர் விமானங்களை வாங்கும் முடிவு எடுக்கப்பட்டது. ஒரு விமானம் 526 கோடி ரூபாய் விலையில் மொத்தம் 32 விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும் அந்த ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்டு, ஒரு விமானத்தின் விலை 1670 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு, தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் புதிதாக அனில் அம்பானியின் ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ நிறுவனத்துடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்தான் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.