தீக்கதிர்

மோடியை எதிர்த்து பாஜக பந்த்…!

===அறிவுக்கடல்===                                                                                                                                                              மோடியின் பயிர்க்காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஃபசல் பீம யோஜனாவில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததைக் கண்டித்து, ஒடிசா மாநிலத்தில் உள்ள நுவப்பாடா மாவட்ட பாஜக, செப்டம்பர் 1 அன்று காலை 7 மணி தொடங்கி பகல் 1 மணி வரை 6 மணிநேரக் கடையடைப்பை நடத்தியுள்ளது. இத்திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிற திட்டம்.
இதில் இழப்பீடு வழங்குவதை மாநில அரசு செய்ய முடியாது என்பதால், இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையே மத்திய அரசிடம் வைக்கப்படுவதுதான். சரியாகச் சொன்னால், இந்தப் போராட்டத்தின்மூலம் மோடி அரசின் கையாலாகாத செயல்பாட்டை பாஜகவினரே வெளிப்படுத்தியுள்ளனர்.

வங்கிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களையும் மூடச் செய்ததன்மூலம், அனைத்துப் பகுதியினரிடமும், மோடியின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் முறையாகச் செயல்படவில்லை என்ற பிரச்சாரத்தை பாஜகவினரே செய்துவிட்டனர்.

தன் முன்னால் பாஜக ஒழிக என்று முழக்கமிட்ட மாணவியைக் கைது செய்யவைத்த, தமிழிசை போன்றவர்கள், மோடி அரசின் குறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டி, பந்த்தை நடத்தியுள்ள இந்த பாஜகவினரை என்ன செய்யப்போகிறார்கள்?