தீக்கதிர்

மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்

ஈரோடு,
ஈரோட்டில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள இரு, நான்கு சக்கரவாகனங்கள் வரும் செப்.7 ஆம் தேதி காலை 10 மணியளவில் ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த வாகனங்களை ஈரோடு மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் செப்.6 ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000 எனவும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.2000 எனவும் செப்.7 ஆம் தேதி காலை9 மணி முதல் 10 மணிக்குள் ஈரோடு மாவட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணத் தொகை செலுத்தும் நபர்மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

வாகனத்தினை ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமல் பிரிவு, ஈரோடு மாவட்டம், தொலைபேசி எண் 0424-2268087 தொலைபேசி வாயிலாகவோ, அலுவலகத்தை நேரடியாகவோ, தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.