தீக்கதிர்

தார் சாலை அமைக்க கோரிக்கை

நாமக்கல்,
எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராமத்தில் தார் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும், இக்கிராமத்தில் ஏராளமான கோவில்கள் அமைந்துள்ள நிலையில், அருகிலுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், இப்பகுதிக்கு செல்ல முறையாக தார் அமைக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் மற்றும் எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தற்போதுள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.