தீக்கதிர்

தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடிப்பு…!

நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை மீனவர்கள் தாக்கி, விரட்டியடித்தாக புகார் எழுந்துள்ளது.

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில், 200 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 20க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்குவந்த இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்களை வழிமறித்து தாக்கி, 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர். கரை திரும்பிய மீனவர்கள், வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.