“தற்போதுள்ள இந்திய வீரர்களின் பேட்டிங் திறமை குறைந்து விட்டது என நம்புகிறேன்.புஜாரா,ரஹானே ஆகியோரிடம் துடிப்பான உறுதியான ஆட்டம் குறைந்து காணப்படுகிறது.சதம் அடித்தாலும் நான்கு வருடத்திற்கு முன்பு ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அந்த உத்வேகம் தற்போதய இங்கிலாந்து தொடரில் இல்லை.

பொதுவாக இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் நன்றாக செயல்பட்டாலும்,சொதப்பினாலும் அது வீரர்களின் பார்ம் பிரச்சனையை எழுப்பாமல் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும்,பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரும் முழு பொறுப்பேற்று,பதில் அளிக்க வேண்டும்.இதே நிலை தொடர்ந்தால் தென்ஆப்பிரிக்கா,இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்வது நடக்கக்கூடிய விஷயமாக இருக்காது’’

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்வி குறித்து கங்குலி கூறியதிலிருந்து…..

Leave a Reply

You must be logged in to post a comment.