சென்னை;
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை பார்த்து பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்ட மாணவி சோபியாவின் பின்புலம் குறித்து விசாரணை நடத்தப்படும். கண்ட இடங்களில் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 50 சதவீதமாக குறைத்து, விலை உயர்வை தடுக்க வேண்டும் என்று கூறினார்.

அரசு சும்மா இருக்காது
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சோபியா குடும்பத்திற்கு கொலை மிரட்டல் வந்தால் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. எந்த இடத்தில் கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.