சென்னை:
காவிரி டெல்டா மாவட்டங்களில் கொல்லைப்புற வழியாக எரிவாயு எடுக்க அனுமதி கொடுத்திருப்பது மிகப்பெரும் ஆபத்து என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்
துள்ளது. இந்த ஆபத்தை தடுத்து நிறுத்திட அனைத்துப் பகுதி மக்களும் ஒருங்கிணைந்து போராட முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஆழமற்ற கடல் பகுதிகளிலும் கரைப்பகுதி யிலும் கச்சா எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுப்பதற்கு தமிழகத்தில் இரண்டு இடங்களில் வேதாந்தா நிறுவனத்திற்கும், நிலப்பகுதிகளில் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கும் அனுமதி வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு மீத்தேன் எடுக்க அனுமதி மறுத்திருந்த நிலையில்
அதை மீறி கொல்லைப்புற வழியாக மீத்தேன் மற்றும் இதர ஹைட்ரோ கார்பன்களை எடுப்பதற்கான முயற்சியாகும் இது.மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பிறகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு, விற்பனை
உள்ளிட்ட கொள்கைகளில் பாதகமான பல மாற்றங்களை செய்துள்ளது. முழுக்க முழுக்க
தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப் பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த கொள்கை எந்தவகையிலும் தேசத்தின் நலன் சார்ந்ததோ, மக்கள் நலன் சார்ந்ததோ அல்ல. கடந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் குறிப் பிட்ட பெட்ரோலிய பொருளை எடுப்பதற்கு மட்டுமே உரிமங்கள் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் மோடி அரசு ஏலம் விடப்பட்ட பகுதியில் ஏற்கெனவே கண்டுபிடித்த பொருளை
மட்டுமன்றி பின்னர் புதிதாக பெட்ரோலியப் பொருட்களை கண்டுபிடித்தால் அவற்றையும் எடுத்துக் கொள்ளலாம் என்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான விலைகளை அந்தந்த கம்பெனிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும், எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயுவை எடுப்பதற்கு ஆரம்பத்தில் 20 ஆண்டுகள், அதன் பின்னர் ஒவ்வொரு 10 ஆண்டுகள் என நீடித்துக் கொள்ளலாம் எனவும் தனியார் கொள்ளைக்கு ஆதரவாக மாற்றி அமைத்துள்ளது.

நாடு முழுவதும் 55 மண்டலங்களை தேர்வு செய்து அதில் 41 மண்டலங்களில் வேதாந்தா
நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் ஒட்டுமொத்த இயற்கை வளங்களை தனியார் கொள்ளை நிறுவனங்களுக்கு மோடி அரசு தாரை வார்த்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மரக்காணம் முதல் கடலூர் வரையிலும், பரங்கிப்
பேட்டை முதல் வேளாங்கண்ணி வரையிலும் உள்ள இரண்டு மண்டலங்களில் கடல் பகுதி
யில் குழாய்கள் அமைத்து இயற்கை வளங்களை கொள்ளையடிக்க வேதாந்தா நிறுவனத்திற்கும்,குள்ளஞ்சாவடி முதல் தரங்கம்பாடி வரை உள்ள பகுதியில் ஒஎன்ஜிசி-க்கும் அனுமதி வழங்கியுள்ளதன் மூலம் டெல்டா மண்டலத்தை  ரசாயன மண்டலமாக மாற்றிட மத்திய அரசு வகை செய்துள்ளது. இதனால் விவசாயம் மற்றும் மீன்வளம் அழிவுக்கு உள்ளாகும்.

தமிழக அரசின் கடந்த கால தடை, மக்கள் எதிர்ப்பு, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை நம்பியுள்ளோர் மற்றும் மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை ஆகியவற்றை கணக்கில் கொண்டு டெல்டா பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய் வேண்டுமெனவும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க அவற்றை வேளாண் மண்டல
மாக அறிவிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

இத்தகைய மோசமான மத்திய அரசின் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.மேலும் டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேராபத்தை தடுத்து நிறுத்திட ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டு மென அனைத்துப் பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக் கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.