திருவனந்தபுரம்:        
கேரளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புக்கு அணைகளை திறந்து தண்ணீரை வெளியேற்றியது காரணமல்ல. விடாமல் அதிதீவிரமாக பெய்த மழையே காரணம் என தேசிய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

அணைகளின் கொள்ளளவை விட பல மடங்கு அதிகம் மழை பொழிந்தது. அதே நேரத்தில் ஒவ்வொரு அணை குறித்தும் தெளிவான விதிகளை உருவாக்க வேண்டும் எனவும் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீருமேட்டை மையமாக கொண்டு அசாதாரண மழை ஆகஸ்ட் 16 முதல் 18வரை பெய்தது. மூன்று நாட்களில் கேரளத்தில் 1200 கோடி கன மீட்டர் மழை வெள்ளம் பாய்ந்து சென்றது. மாநிலத்தின் அனைத்து அணைகளிலும் நீரின் கொள்ளளவு 250 கோடி கன மீட்டர் மட்டுமே. வெள்ளத்தின் வேகம் அதிகரிக்க அணைகளை திறந்தது காரணமல்ல. அணைகள் இல்லாத சாலியாறு பகுதியிலும் பெருவெள்ளம் ஏற்பட்டது. அணைகளை முன்னதாகவே திறந்திருக்க வேண்டும் எனவும் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.