மதுரை;
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் நிதியையும் 25 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களையும் வழங்கியுள்ளது. புதனன்று நடைபெற்ற நிகழ்வில் மேலும் ரூ. 2 லட்சத்தை ஓய்வூதியர் சங்கம் வழங்கியுள்ளது. மொத்தம் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மதுரை அலுவலகத் திறப்பு விழாவில்,
அமைப்பின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் இதைத் தெரிவித்தார்.புதனன்று மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே அமைப்பின் மதுரை மாவட்டத் தலைவர் குரு.தமிழரசு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன்

புதிய அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மாநிலப் பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மாநிலப் பொருளாளர் என்.ஜெயச்சந்திரன், மாநிலச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், நிர்வாகிகள் மகாலிங்கம், சின்னச்சாமி, சங்கரலிங்கம், பழனி, சுந்தரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ராதா உட்பட 200-க்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திறப்பு விழாவில் சீதரன் பேசியதாவது:-
தமிழக அரசு தங்களது வரி வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்றவர்களுக்காக செல விட்டுவருவதாகக் கூறி வருகிறது. இது தவறான தகவலாகும். மேலும் அரசு ஊழியர்களையும், ஓய்வு பெற்றவர்களையும் மக்களுக்கு எதிராக திருப்பிவிடும் நடவடிக்கையாகும்.

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளை தீர்ப்பதற்கு நிதியைப் போராடிப் பெற வேண்டிய தமிழக அரசும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மௌனமாக உள்ளனர். ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிதி கூட முழுமையாக இன்னும் வந்துசேரவில்லை. மணல் கொள்ளை, அரிசி கடத்தல், டெண்டர் விடுவதில் ஊழல் என அனைத்தும் தமிழகத்தில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது.

மணல் கொள்ளையால் முக்கொம்பு அணையின் மதகு கள் உடைந்துவிட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று முழங்கியதற்காக சோபியா கைது செய்யப்பட்டார். இடது சாரி செயற்பாட்டாளர்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளால் மத்தி யிலும் மாநிலத்திலும் மினி எமெர்ஜென்சி அமல்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

மத்திய அரசு மதவெறித் தன்மையோடு செயல்பட்டு வருகிறது. இவர்களால் தேசத்தின் ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.ஓய்வூதியர்கள் தங்களது கோரிக்கை களுக்காக போராடும் அதே நேரத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காகவும் போராடிவருகின்றனர். நெடுவாசல் போராட்டம், எட்டுவழிச் சாலைக்கு எதிரான போராட்டத்தில் ஓய்வூதியர்கள் பங்கேற்றுள்ளனர்.
மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட வேண்டிய கடமை ஓய்வூதியர்களுக்கு உள்ளது. அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்திற்கு மக்கள் கோரிக்கைகளோடு வந்தால் அந்த கோரிக்கை நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை அவர்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.