ஜம்மு,
காஷ்மீர் மாநிலத்தில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் தெரிவித்துள்ளதாவது:- பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த சிறுமியின் தந்தையின் முதல் மனைவியின் 14 வயது மகன் அவனது நண்பர்களுடன் இணைந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியது தெரியவந்துள்ளது. பின்னர் அச்சிறுமியை அடித்துக்கொலை செய்து கூர்மையான ஆயுதத்தால் கண்களை தோண்டி பின் திராவகத்தை ஊற்றி உடலை சிதைக்கவும் செய்துள்ளனர். பின்னர், அங்கு இருந்த புதர் ஒன்றுக்குள் மரக்கிளைகள் உள்ளிட்டவற்றை வைத்து உடலை மறைத்து வைத்துள்ளனர்.
சிறுமியின் தந்தையின் முதல் மனைவி தூண்டுதலோடு, அவரது மகன் இந்த கொடூர செயலை நடந்துள்ளது. தனது கணவர், இரண்டாவது மனைவி அவரது பிள்ளைகளுடன் நெருக்கமாக இருந்ததால், பொறாமை காரணமாக, சிறுமியை கொலை செய்ய, முதல் மனைவி முடித்து எடுத்துள்ளார் என்பதை சிறப்பு விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: