தீக்கதிர்

கல்புர்கி, கவுரி லங்கேஷை இருவரையும் சுட்டது ஒரே ரக துப்பாக்கி – தடயவியல் துறை

பெங்களூரு,
மூத்த பத்திரிகையாளர் எம்.எம் கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் ஆகிய இரண்டு பேரையும் சுட்டுக்கொன்றது ஒரே துப்பாக்கி என்று என்று தடயவியல் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மூத்த பத்திரிகையாளரும், ஹம்பி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான எம் கல்புர்கி கடந்த 2015ம் ஆண்டு அவரது வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இந்துத்துவா அமைப்பான சனாதன சஸ்தா அமைப்புக்கு தொடர்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
இதேபோல் பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு அடையாளம் தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்திய அரசு வழங்கிய சாகித்ய அகாதெமி விருதை திரும்பி ஒப்படைத்தனர். இந்நிலையில் இந்த இரண்டு கொலை சம்பவங்களிலும் பயன்படுத்தப்பட்டது ஒரே ரக துப்பாக்கிதான் என தடயவியல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு நீதிமன்றத்தில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையின் போது தனிப்படை காவல்துறையினர் இருவரும் சுடப்பட்டது 7.5 எம்எம் கலிபெர் பிஸ்டல் ரக துப்பாக்கியால்தான் என உறுதி செய்துள்ளனர்.