சென்னை;   
கேரள கடல்பகுதியில், கப்பல் மோதி உயிரிழந்த நான்கு மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் இனயம்புத்தன்துறை, தேங்காப்பட்டணம் கிராமங்களைச் சோ்ந்த 9 நபா்கள், அகஸ்தீஸ்வரத்தைச் சோ்ந்த 2 போ் உள்பட 14 மீனவா்கள் கேரள மாநில முனம்பம் என்ற இடத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கப்பல் ஒன்று மோதி மீன்பிடி படகு கவிழ்ந்தது. அதில், நான்கு மீனவா்களின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டன. காணாமல் போன மீனவா்கள் குறித்து விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையாளா் தலைமையில் அலுவலா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அறிக்கையின் அடிப்படையில் காணாமல் போன மீனவா்கள் இறந்தவா்களாகக் கருதி உரிய நிவாரணம் அளிக்கப்படும்.

விபத்தில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட நான்கு மீனவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: