தீக்கதிர்

இரவோடு இரவாக இடிக்கப்பட்ட பூமார்க்கெட் நுழைவுவாயில்

திருப்பூர்,
திருப்பூர் பூ மார்க்கெட்டின் நுழைவு வாயில் பெயர்ந்து விழுந்து பொது மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.இதில் மீதமிருந்த நுழைவு வாயில் முகப்பை மாநகராட்சி நிர்வாகம் செவ்வாயன்று இரவேடு இரவாக இடித்தனர்.

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் நூறுக்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. இங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து பூக்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் எப்போதும் இந்த பகுதியில் மக்கள் நெருக்கடியாக காணப்படும். இக்கட்டிடம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கட்டிடமாகும். இதன் முகப்பு வாயில் சுவரில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சுவற்றின் மேல் பகுதி கற்கள் பெயர்ந்து விழுந்தது. மேலும் நுழைவுவாயிலில் உள்ள முகப்பில் பெரும்பாலான பகுதியில் விரிசல் ஏற்பட்டிருந்ததால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் மற்றும் பூ மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பூ மார்க்கெட்டில் உள்ள நுழைவு வாயிலில் முகப்பை திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் புதனன்று இரவோடு இரவாக இடித்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து வியாபாரிகள், உடனடியாக புதிய நுழைவு வாயில் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.