லக்னோ:
ஆர்.பி.சிங் என செல்லமாக அழைக்கப்படும் ருத்ர பிரதாப் சிங் 2005 முதல் 2011-ஆம் ஆண்டு வரை டெஸ்ட்,ஒருநாள்,டி-20 என மூன்று வகையான போட்டிகளில் இந்திய அணிக்காக நட்சத்திர வேகப் பந்துவீச்சளார் அந்தஸ்தில் ஜொலித்தவர்.

32 வயதாகும் ஆர்.பி.சிங் இந்திய அணிக்காக 14 டெஸ்டுகளிலும்,58 ஒருநாள் ஆட்டங்களிலும்,10 டி-20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.2007-ஆம் ஆண்டு அறிமுகமான டி-20 உலகக்கோப்பை தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார்.2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஆர்.பி.சிங் கடைசியாக விளையாடினார்.ஐபிஎல் தொடரிலும் கலக்கிய ஆர்பி சிங் சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.