சென்னை;
சென்னை வந்துள்ள 15-வது நிதிக்குழுவினர் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
2020ஆம் ஆண்டு முதல் 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வரவுள்ளது. இதனால் மாநில வளர்ச்சிப் பணிகள், ஒதுக்க வேண்டிய நிதிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நிதிக்குழு ஆலோசனை செய்து கருத்துக்களை கேட்டறிந்து வருகிறது. இதன் அடிப்படையில், என்.கே.சிங் தலைமையிலான 15-ஆவது நிதிக்குழு செப்டம்பர் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இந்நிலையில் சென்னை வந்துள்ள நிதிக்குழுவினர், தலைமைச் செயலகத்தில் அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்கள், தொழில் முனைவோர்களிடமும் கருத்து கேட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.