நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆடவர் ஒற்றையர்:
ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில்,உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்),அதிரடிக்கு பெயர் பெற்ற டோம்னிக் தியமை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார்.தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரபேல் நடால் 0-6,6-4,7-5,6-7(4-7),7-6(7-5) என்ற செட் கணக்கில் 4:49 மணி நேரம் போராடி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவின் டெல்போர்ட்டோ, அமெரிக்காவின் ஜான் இஸ்னரை 6-7(5-7),6-3,7-6(7-4),6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர்:
பட்டம் வெல்வார் என கணிக்கப்பட்ட அமெரிக்காவின் ஸ்டீப்ஹென்ஸ் தனது காலிறுதி ஆட்டத்தில் லத்வியாவைச் சேர்ந்த செவஸ்டோவாவிடம் 2-6,3-6 என்ற நேர் செட்டில் வீழ்ந்து உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்,செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை 6-4,6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி,தொடர்ந்து 9-வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

போபண்ணா ஜோடி வெளியேற்றம்
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா – பிரான்ஸின் வாஷிலியுடன் ஜோடி சேர்ந்து அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடி வருகிறார்.போபண்ணா – வாஷிலி ஜோடி தனது காலிறுதி ஆட்டத்தில் கொலம்பியாவின் கபால் – பராஹ் ஜோடியிடம் 6-3,6-4 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

இன்றைய காலிறுதி ஆட்டங்கள்:

ஆடவர் ஒற்றையர்
மரின் சிலிக் (குரோஷியா) – நிஷிகோரி(ஜப்பான்)
ஜோகோவிச் (செர்பியா) – மில்மேன் (ஆஸ்திரேலியா)

மகளிர் ஒற்றையர்
நவரோ (ஸ்பெயின்) – கீஸ் (அமெரிக்கா)
ஒசாகா (ஜப்பான்) – ட்சுரென்கோ (உக்ரைன்)

Leave a Reply

You must be logged in to post a comment.