திருப்பூர்,
திருப்பூர் யுனிவர்சல் பள்ளிக் குழுமத்தின் சார்பில் கேரள வெள்ள நிவாரணத்திற்காக கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டது.

பல்லடம் சேடபாளையத்தில் உள்ள யுனிவர்சல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி மற்றும் வெள்ளியங்காடு, ஆர்விஇ நகரில் உள்ள யுனிவர்சல் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்கினர். இவ்வாறு சேமிக்கப்பட்ட மொத்த நிதி ரூ. 3 லட்சத்தை செவ்வாயன்று கேரள முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்ததாக பள்ளித் தாளாளர் முதல்வர் எஸ்.இராஜகோபால் தெரிவித்தார். கேரள வெள்ள பாதிப்பு குறித்து மாணவர்களுக்குத் தெரிவித்து அவர்களால் இயன்ற நிதி வழங்க கேட்டுக் கொண்டபோது, எவ்வித வித்தியாசமும் இல்லாமல் மனமுவந்து நிதியை மாணவர்கள் அள்ளிக் கொடுத்தனர், இந்த நிதி தவிர ஏறத்தாழ ரூ. 1லட்சம் மதிப்பிலான பொருட்களும் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றும் எஸ்.இராஜகோபால் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.