சேலம்,
சேலம் மாநகர பகுதிகளில் மேம்பால பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட வேண்டும் என வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மேற்கு மாநகர மாநாடு மாநகர தலைவர் வி.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என். பிரவீன்குமார் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் முன்னாள் நிர்வாகி பி.பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். மாநகர செயலாளர் பி.கணேசன் அறிக்கையை முன்வைத்துப் பேசினார். இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மேற்கு மாநகர தலைவராக வி.ஜெகநாதன், செயலாளராக எஸ்.சிலம்பரசன், பொருளாளராக டி.கண்ணதாசன், துணை தலைவர்களா சி.ராமன்,வி.வினோத், துணைச் செயலாளர்களாக எஸ்.இந்துமதி, ஆர்.கோபிநாத் உட்பட 15 பேர் கொண்ட மாநகரக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்
கப்பட்டனர்.

முன்னதாக, இம்மாநாட்டில் சேலம் மாநகர பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே மேம்பாலபணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இதேபோல், சாலைகளை தொடர்ச்சியாக சேதப்படுத்தும் வகையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அயோத்தியாப்பட்டிணம் ஒன்றிய மாநாடு;
இதேபோல், வாலிபர் சங்கத்தின் அயோத்தியாப்பட்டிணம் ஒன்றிய மாநாட்டை மாவட்டத் தலைவர் கந்தசாமி துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட நிர்வாகி பெரியசாமிவாழ்த்திப் பேசினார். இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய தலைவராக எ.மேகநாதன், செயலாளராக சி.நாகராஜன், பொருளாளராக மணிவண்ணன், உதவி தலைவராக குமரேசன், துணை செயலாளராக எம்.சத்தியகாந்த் உள்ளிட்ட 9 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்ந்தெடுப்கப்பட்டது. முன்னதாக, சேலம் – சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்தை முழுமையாக அரசு கைவிட வேண்டும். சுங்கச் சாவடி கட்டணங்களை குறைத்திட வேண்டும், அயோத்தியாப்பட்டிணம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.