ஜெய்பூர் :

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படைத்தளத்திலிருந்து வழக்கமான சுற்று செயல்பாட்டுக்கு சென்ற இந்திய விமானப்படையின் மிக்-27(MiG) ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தை இயக்கிய விமானமோட்டி பாதுகாப்பாக விமானத்திலிருந்து குதித்து உயிர் தப்பினார். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த இந்திய விமானப்படையின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வரும், இந்திய விமானப்படையின் இரண்டு பிரிவுகளில் இன்னும் செயல்பாட்டில் உள்ள மிக்-27 ரக போர் விமானங்கள் அடுத்த வருடத்தோடு காலாவதியாக உள்ளன. கடந்த ஜூன் மாதம் இதே மிக்-27 ரக விமானம் ஜோத்பூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதேபோல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜோத்பூர் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்கும்போது சக்கரம் வெடித்து விபத்து ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ஜோத்பூர் விமான தளத்திலிருந்து புறப்பட்ட இதே வகையைச் சார்ந்த விமானம் பார்மர் பகுதியில் ஓடும் இரு சக்கர வாகனத்தின்மீது விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.