தாராபுரம்,
தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நகராட்சி ஆணையாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. உணவு பாதுகாப்பு அதிகாரி லியோ, வர்த்தக சங்க தலைவர் ஞானசேகரன், ஹோட்டல் உரிமையாளர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாராபுரம் நகரத்திலுள்ள மளிகைகடை, டீக்கடை, உணவலகங்கள், பேக்கரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் லட்சுமணன் பேசுகையில், தாராபுரம் பகுதியில் பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பைகளை அதிகம் பயன்படுத்தும் மளிகைகடை உள்ளிட்ட கடை வியாபாரிகள் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை தடுப்பதுடன், பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து
எடுத்துக்கூறி பொருட்களை வாங்குவதற்கு துணிப்பைகளை எடுத்துவர கூறவேண்டும்.

மேலும், டீக்கடை, உணவலகங்கள் பார்சல் வாங்குபவர்களிடம் பாத்திரங்கள் கொண்டு வந்து வாங்கி செல்ல அறிவுறுத்தவேண்டும். பிளாஸ்டிக்கை ஒழிக்க நகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார். முடிவில் சுகாதார ஆய்வாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.