தீக்கதிர்

தங்கம் வென்றும் சந்தோசத்தை இழந்த தேஜீந்தர் சிங்…!

சண்டிகர் :                                                                                                                                                                              இந்தோனேஷியாவில் நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர் தேஜீந்தர் சிங் குண்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

தங்கம் வென்ற தேஜீந்தர் சிங் தான் வாங்கிய தங்க பதக்கத்தை தனது தந்தையிடம் காட்டுவதற்காக மிகுந்த ஆசையுடன் இந்தியா வந்து சேர்ந்தார். அடுத்த சில மணி
நேரங்களில் தந்தையின் இறப்புச் செய்தியை தேஜீந்தர் சிங்கிடம் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். தேஜீந்தர் சிங்கின் தங்கப்பதக்கத்தால் நாடே ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க, அவரது குடும்பம் சந்தோஷத்தை இழந்து தவிக்கிறது.