கோவை,
கோவை காமராஜபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் விவரம் வருமாறு: கோவை மாவட்டம், காமராஜபுரம் பகுதியில் உள்ள கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் உள்ள நாராயணசாமி சாலையில் புதியதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையினால் பெரும் இன்னலுக்கு உள்ளவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தொழிற்சாலையால் பாதிப்பு
இதேபோல், கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் சுற்றுசூழல் தொடர்பான சட்டத்திட்டங்கள் கடைப்பிடிக்கப்படுவது இல்லை. இதனால், அருகில் உள்ள விவசாய நிலம், மேய்ச்சல் நிலம், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயியான சண்முகம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.