புவனேஸ்வர்:
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷி லால். பாஜக தலைவர்களில் ஒருவரான இவர், அக்கட்சி சார்பில் ஹரியானா அமைச்சராகவும் இருந்துள்ளார். மத்தியில் மோடி ஆட்சி அமைந்ததும் கணேஷி லால், ஒரிசா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில்தான், கணேஷி லால், புவனேஸ்வரிலிருந்து ஹரியானாவிலுள்ள சிர்சா எனும் சொந்த ஊருக்குச் சென்றுவர ரூ. 46 லட்சம் மக்கள் பணத்தை சூறையாடியுள்ளார்.
புவனேஸ்வரிலிருந்து தில்லிக்கு தனி விமானத்தில் சென்ற இவர், பின்னர் அங்கிருந்தும் ஹெலிகாப்டர் மூலமாக சிர்சாவுக்கு சென்றாராம். அதாவது தரையிலேயே நடக்கவில்லை; கடைசிவரை ஆகாயத்திலேயே பறந்துள்ளார்.

ஒரு ஆளுநருக்கு, ஆண்டொன்றுக்கே ரூ. 11 லட்சம்தான் பயணச் செலவாக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 4 ஆண்டுகளுக்கு உரிய தொகையை ஒரே பயணத்திற்கு செலவிட்டு கணேஷி லால் ஆடம்பரத்தைக் காட்டியுள்ளார். இதற்கு ஒரிசா எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.ஆனால், குடியரசுத் தலைவர் மாளிகை அனுமதி பெற்றே இத்தொகை செலவு செய்யப்பட்டதாக, ஒடிசா ஆளுநர் மாளிகை சமாளித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.