திருப்பூர்,
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் சூழல் உள்ளது. இயற்கை சீற்றங்களை தடுப்பதற்கான ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செவ்வாயன்று திருப்பூரில் பேட்டியளித்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை அருள்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர் . அவர்கள் வான்வெளி ஆராய்ச்சி குறித்த சந்தேகங்களை மயில்சாமி அண்ணாதுரையிடம் கேட்டு தெரிந்துகொண்டனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, விண்வெளி ஆராய்ச்சி இயற்கை பேரழிவுகளை கண்டறிவதோடு அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு ஆய்வினை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும், நிலவில் மனிதன் வாழமுடியுமா என்ற விவாதப்பொருளை கடந்து தற்போது நிலவில் நீர் இருப்பதையும், விவசாயம் செய்யமுடிவதற்கான மூலக்கூறுகள் இருப்பது மற்றும் ஒருவார காலத்தில் சென்று வரக்கூடிய தொலைவு ஆகியவற்றால், மனிதன் எளிதாக சென்றுவர முடியும் என கண்டறியப்பட்டிருக்கின்றது. இதேபோல், செவ்வாயில் நிரந்தமாக வாழும் சூழல் உள்ளது. மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே விண்வெளி ஆராய்ச்சி படிப்பினை மேற்கொள்ள தயக்கம் இருக்கின்றது. மேலும், இனி வரும்காலங்களில் அந்த சூழ்நிலை மாறி மாணவர்கள் விரும்பிப் பயில்வார்கள் என கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.