கோவை,
தி கோவை சோசியல் கிளப் சார்பாக கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினர்.

தி கோவை சோசியல் கிளப் 1955 ஆம்  ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி மற்றும் முகாம், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்வித் தொகை உதவி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் பெய்த பெருமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு உதவுகின்ற வகையில், பேரிடர் நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்தை திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் வழங்கினர். இதனை அமைப்பின் தலைவர் என்.சுப்பிரமணியன், செயலாளர் பி.சேகரன், செயற்குழு உறுப்பினர் ஏ.லோகநாதன், துணைத் தலைவர் ஆர். ரவிச்சந்திரன், பொருளாளர் பி.முருகேசன், துரைக்கண்ணன், எப்.ரவி ஆகியோர் வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.