சேலம்,
சேலத்தில் கல்குவாரி நீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், அம்மாபாளையம் சாஸ்திரிநகர் பகுதியில் வசிக்கும் சிவபிரகாசம் என்பவரின் மகன் கவுசிகன், இவரின் வீட்டின் அருகில் வசிக்கும் ரவி என்பவரின் மகன் மாரிமுத்து. நண்பர்களான இருவரும் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் தங்களது நண்பர்களுடன் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். குளிக்கும் போது ஆழமானபகுதிக்கு சென்றதால் மாரிமுத்து, கவுசிகன் இருவரும் நீரில் மூழ்கினர். வெளியில் சென்ற இரண்டு பேரும் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர்கள் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, கல்குவாரிக்கு கல் உடைக்க சென்ற தொழிலாளர்கள், நீரில் மாணவர்கள் மிதப்பதை கண்டு சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவர்களின் உடல்களை கைப்பற்றி சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவர்களுடன் சென்ற மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: