திருப்பூர்,
காங்கயம் அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் இறக்கின்றது. இதைக் கண்டுபிடிப்பதற்கு வனத்துறையினர் திங்களன்று 5 கிராமங்களில் 12 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்ட காங்கயம் தாலுகா பகுதியில் பட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகள் தொடர்ந்து மர்மவிலங்கு கடித்து உயிரிழந்து வந்தது. இதில் கடந்த மாதத்தில் மட்டும் நூறு ஆடுகள் இறந்தது. காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் அதிகளவில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இப்பகுதி மிகவும் வறட்சியானதாகும். இங்கு விவசாயிகள் ஆடு வளர்ப்பே பிரதான தொழிலாகவும் மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜுலை 31ம் தேதி பாப்பினி கிராமம் உத்தாம் பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது தோட்டத்து பட்டியில் 6 ஆடுகள், மர்ம விலங்கு கடித்து பலியாகின. மேலும் 22ம் தேதி இதே கிராமத்தை சேர்ந்த நடராஜ் தோட்டத்தில் 6 ஆடுகளை இறந்தன. 23ம் தேதி முள்ளிபுரம் அரண்மனைக்காடு பகுதியில் உள்ள விவசாயி செல்வம் என்பவரது தோட்டத்து பட்டியில் 10 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்தது.

இந்நிலையில், வனத்துறையில் சார்பில் மர்ம விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க திங்களன்று அரண்மனைக்காடு, பாப்பினி, முள்ளிபுரம் மற்றும் உத்தாம்பாளையம் ஆகிய பகுதியில் 12 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதிகளில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள காங்கயம் வனச்சரக தலைமையில் ஐந்து பேர் கொண்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.