கோவை,
கேரள மாநிலத்திற்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான மருந்துகளை கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனுப்பி வைத்தனர்.

கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பு முடிந்து தற்போது பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில், கோழிக்கோடு, எர்ணாகுளம், திருவணந்தபுரம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் எலி காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் இப்பகுதியில் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த கூடுதல் மருந்துகள் தேவைப்படுகிறது. இதனை தொடர்ந்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் படிக்கும் மாணவ, மாணவிகள் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தேவையான மருந்துகளை சேகரித்தனர். அதன்படி, எலிக்காய்ச்சலுக்கான மருந்து, அலர்ஜி தொடர்பான ஊசிகள், மருந்துகள், விட்டமின் மாத்திரைகள், ஆண்டி பயாடிக், இருமல் மருந்து, குழந்தைகளுக்கான மருந்துகள், பஞ்சு என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான மருந்துகளை சேகரித்தனர். இதனை திங்களன்று அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியின் முதல்வர் அசோகன் தலைமையில் கேரளாவில் உள்ள பலக்காடு முகாமிற்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, ரூ.2 லட்சம் மதிப்பிலான மருந்துகளை ஏற்கனவே இந்த மாணவர்கள் சேகரித்து கேரளாவிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

%d bloggers like this: