புதுதில்லி:
பிரதமர் மோடியின் ஆதரவுபெற்ற நிறுவனங்கள் ரூ. 29 ஆயிரம் கோடி அளவிற்கு நிலக்கரி ஊழலில் ஈடுபட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.நிலக்கரியை அதிக அளவில் பயன்படுத்தும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட 40 நிறுவனங்கள் இந்தோனேசியா நாட்டில் இருந்து நிலக்கரிகளை இறக்குமதி செய்துள்ளன. ஆனால், இதில் போலி பில்களை மத்திய வருவாய்த் துறைக்கு வழங்கி ஊழலில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு ரூ.29 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
இது சம்பந்தமாக மத்திய நிதித்துறையின் பிரிவான வருவாய் புலனாய்வுத்துறை, சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த முறைகேட்டில் பிரதமர் மோடிக்கு மிக நெருங்கிய நிறுவனமான அதானி குரூப் நிறுவனங்கள், அனில் அம்பானி நிறுவனங்கள், எஸ்ஸார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. இதில், சுமார் 70 சதவிகித நிலக்கரி அதானி நிறுவனங்களுக்கு வந்துள்ளன.எனவே, இதன்மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: