சேலம் :
சேலம் மாநகராட்சியின் புதுப்பேட்டை பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தலைமையில் ஊர்பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் ஒன்று திரண்டு அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சி 37வது வார்டுக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கும் பெண்களுக்கும் கழிப்பிட வசதியின்றி திறந்த வெளியில் மலம் கழித்து வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதைத்தடுத்து அங்கு கழிப்பிட வசதியெ்து தர வேண்டும். அப்பகுதியில் உள்ள மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்ற வேண்டும். ஓடையை தூர் வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தெருவிளக்கு மற்றும் வீடுகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் தங்களின் பிரச்சனை குறித்து மாநாகராட்சி அதிகாரிகளிடம் மனுவை அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: