புதுதில்லி;
2019 மக்களவைத் தேர்தலில், 30 முதல் 40 தொகுதிகளை பாஜக இழக்கும் என்று கூறி, அக்கட்சியினரை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்திய குடியரசுக் கட்சியின் (அத்வாலே பிரிவு) தலைவரான ராம்தாஸ் அத்வாலே, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த முக்கியமான தலித் தலைவர் ஆவார். கடந்த தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்த அத்வாலே, பந்தர்பூர் தொகுதியில் வெற்றிபெற்று, மத்திய சமூகநீதித்துறை அமைச்சராகவும் ஆனார்.

இந்நிலையில்தான் பேட்டி ஒன்றை அளித்திருக்கும் அத்வாலே, “2019 மக்களவைத் தேர்தலில், பாஜக- அது கணித்திருப்பதைக் காட்டிலும் 30 முதல் 40 தொகுதிகளை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார். குறிப்பாக, குஜராத்தில் படேல் சமூகத்தினரின் பிரச்சனைக்கு தீர்வுகாணாவிட்டால், 3 தொகுதிகளை பாஜக இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ள அத்வாலே, ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளை பாஜக இழந்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: