தீக்கதிர்

2 பேரை கார் ஏற்றி கொன்ற பாஜக தலைவர் மகன்…!

ஜெய்ப்பூர்;
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், அக்கட்சியின் ஜெய்ப்பூர் நகர விவசாய அணித் தலைவராக இருப்பவர் பத்ரி. இவரது மகன் பரத் பூஷன் மீனா (35). இவர் சனிக்கிழமையன்று அதிகாலை தனது காரை அதிவேகமாகவும், தாறுமாறாகவும் ஓட்டிச் சென்று நடைமேடையில் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.