தீக்கதிர்

ரூபாய் நோட்டுக்களிருந்து    தொற்று நோய் ! தெளிவு படுத்த மத்திய அரசிற்கு வேண்டுகொள்

இந்தியாவில் புழக்கதில் இருந்து வரும் ரூபாய் நோட்டுகள் மூலம் தொற்று நோய் ஏற்படுவதாக மக்கள் மத்தியில் அச்சம் எழுந்திருக்கிறது. மேலும் சில ஆய்வுகளும் இதனை உறுதி படுத்தியிருக்கின்றன. எனேவ மத்திய அரசு இதுகுறித்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு தெளிவு படுத்த வேண்டும் என்று அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசிற்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி, சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்  ஹர்ஷவர்தன் ஆகியோருக்கு அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு  எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :இந்தியாவில் புழங்கும்  ரூபாய் நோட்டுக்களில் உள்ள மாசுக்களால்  சிறுநீரக தொற்றுகள், மூச்சு பிரச்னை, தோல் நோய்கள், குடல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன.

இவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். இந்த தகவல் உண்மையானது என்றால், அதிக அளவில் ரூபாய் நோட்டுக்கள் வர்த்தக துறையிலேயே புழங்குவதால் வர்த்தகர்கள் மட்டும் இன்றி வாடிக்கையாளர்களும் பலவித நோய்களுக்கு ஆளாக நேரிடம்.   அதனால் இந்திய மருத்துவ கழகம், ரூபாய் நோட்டுக்களால் நோய்கள் பரவுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, விசாரணை நடத்த வேண்டும். அதனை தடுக்கும் நடவடிக்கையிலும் இறங்க வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜினோமிக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜெனோமிக்ஸ்  சேர்ந்த உயிரியலில் விஞ்ஞானிகள்,  ரூபாய் நோட்டுகளில் குறைந்தபட்சம் 78 நோய்களைக் கொண்ட DNA அடிச்சுவடுகளின் தடயங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.