சென்னை,
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் 90 நாட்களுக்கு உண்ண விரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு உயர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் மெரினா கடற்கரை பகுதியில் எந்த போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ, உண்ணா விரதமோ நடத்த அனுமதி கிடையாது என்றும் சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள 27 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கடற்கரையில் ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த கடந்த ஏப்ரல் 28 ம் தேதி அனுமதி அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உடனே மேல்முறையீடு செய்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின் போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சசிதரன், சுப்ரமணியன் அமர்வு, மெரினாவில் எவ்வித போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது. இதனால் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.