ரியோ டி ஜெனீரோ:
பிரேசில் நாட்டில் உள்ள 200ஆண்டுகள் பழைமையான  நேஷனல் மியூசியத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான கலைப்பொருட்கள் எரிந்து சாம்பலாயின. தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகிறார்கள்.
பிரேசில் நாட்டின் தலைநகர்  ரியோ டி ஜெனீரோ நகரில் 200 ஆண்டுகால பழமையான நேஷனல் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க ஆவணங்கள் மற்றும் கலைப்பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து  தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
இந்த தீ விபத்து காரணமாக பலகோடி ரூபாய்  மதிப்பிலான வரலாற்று பொக்கிஷங்கள் கருகிப்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பண்டைய காலத்தில் போர்ச்சுகீசிய அரச குடும்பத்தின் மாளிகையாக இருந்த இந்த அருங்காட்சிகத்தின் 200 ஆண்டு நிறைவு விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: