காந்தி நகர்:                                                                                                                                                                              குஜராத் மாநிலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் லீலாதர் வகேலா. 83 வயதாகும் இவர், படான் மக்களவைத் தொகுதி எம்.பி.யும் ஆவார். இந்நிலையில், சனிக்கிழமையன்று நடைப்பயிற்சி மேற்கொண்ட லீலாதர் வகேலா-வை தெருவில் திரிந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று திடீரென விரட்டி விரட்டி முட்டியுள்ளது. இதில் இடுப்பு எலும்புகள் முறிந்தும், தலையில் பலத்த காயம் அடைந்தும் வகேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.